கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

மும்பையில் புறநகர் மின்சார ரயில் சேவை பிப்.1 முதல் தொடக்கம்

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மும்பை புறநகர் ரயில்சேவை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :29 ஜனவரி 2021, 9:47 am

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மும்பை புறநகர் ரயில்சேவை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரில் புறநகர் மின்சார ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் கரோனாவின் பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் மும்பையில் புறநகர் மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்சேவை தொடங்கப்படும் எனவும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் இதுவரை 20,18,413 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.