47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜஸ்தானில் விஷ சாராயம் குடித்த 4 பேர் பலி

ராஜஸ்தானில் விஷ சாராயம் குடித்த 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :29 ஜனவரி 2021, 12:52 pm

DIN

ராஜஸ்தானில் விஷ சாராயம் குடித்த 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ராஜஸ்தானின் பில்வாரா கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 4 பேர் நேற்றிரவு பலியானார்கள். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகளுக்கு சென்ற காவல்துறையினர் மாதிரிகளை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் இச்சம்பம் தொடர்பாக காவல்துறையினர் உள்ளிட்ட 12 பேரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நடவடிக்கை எடுத்துத்துள்ளார்.
மேலும் விஷ சாராயம் குடித்த இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50ஆயிரமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.