உ.பி. எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்
தில்லி - உத்தரப் பிரதேச எல்லையான திக்ரி பகுதியில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.


தில்லி - உத்தரப் பிரதேச எல்லையான திக்ரி பகுதியில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
திக்ரி எல்லையிலிருந்து விவசாயிகள் வெளியேற வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு வலியுறுத்திய நிலையில், விவசாயிகள் அப்பகுதியில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வெளியேற வலியுறுத்தி அம்மாவட்ட அரசு உத்தரவு பிறப்பித்தது.
அவர்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளைத் துண்டித்தது.
எனினும் விவசாயிகள் திக்ரி எல்லையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக விவசாய சங்கத் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வெளியேற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதியிலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...