
புதுதில்லி: கரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களின் பணியால் நாடு பெருமிதம் கொள்வதாகவும், மருத்துவ உலகில் இந்தியாவின் முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை என்று மருத்துவர்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற மருத்துவருமான பிதன் சந்திரராய் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவர் பிறப்பும், இறப்பு தினமான ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜூலை முதல் நாள் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்குமான நாளாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல தரப்பினரும் மருத்துவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கரோனா பெருந்தொற்று பலநிலைகளில் பரவி அச்சுறுத்தி வரும் நெருக்கடியான காலகட்டத்திலும் தங்களின் உயிரையும், குடும்பங்களையும் பொருட்படுத்தாமல் சமூகப் பணியாற்றி வருகின்றனர், அவரது பணிகள் பொருமைக்கும், பெருமைக்கும் பாராட்டுக்குரியவை.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் அனைத்து மருத்துவர்களும் மேற்கொண்டுள்ள பணியால் நாடு பெருமிதம் கொள்வதாகவும், மருத்துவ உலகில் இந்தியாவின் முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை என்று மருத்துவர்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ தினமாக கடைபிடிக்கப்படும் ஜூலை 1 ஆம் நாளான வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு இந்திய மருத்துவக் கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் மருத்துவ சமூகத்துடன் தான் பேச உள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.