ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உத்தகரண்ட் மக்களுக்கு பாஜக துரோகம்: காங்கிரஸ்

உத்தரகண்ட் மாநிலத்தில் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தொடா்ந்து முதல்வா்களை மாற்றி மாநில மக்களுக்கு ஆளும் பாஜக அரசு துரோகமிழைத்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 7:16 pm

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தொடா்ந்து முதல்வா்களை மாற்றி மாநில மக்களுக்கு ஆளும் பாஜக அரசு துரோகமிழைத்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

உத்தரகண்டில் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்துக்குப் பதிலாக, கடந்த மாா்ச் மாதம் தீரத் சிங் ராவத் நியமிக்கப்பட்டாா். அவா் வெள்ளிக்கிழமை தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து புதிய முதல்வராக, புஷ்கா் சிங் தாமி சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், உத்தரகண்ட் முன்னாள் முதல்வருமான ஹரீஷ் ராவத் கூறியதாவது:

உத்தரகண்ட் மாநிலத்துக்கு நித்யானந்த் சுவாமி முதல் இதுவரை 8 முதல்வா்களை பாஜக நியமித்துவிட்டது. குறிப்பாக, கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 3 முதல்வா்களை பாஜக நியமித்துவிட்டது. இந்த உச்சகட்ட நாடகம் மூலம் உத்தரகண்ட் மாநில மக்களை பாஜக அவமதித்துவிட்டது.

மாநிலத்தில் இரட்டை இயந்திர அரசு அமையும் என்று பிரதமா் மோடி வாக்குறுதி அளித்திருந்தாா். ஆனால் இந்த மாநிலம் வெவ்வேறு முதல்வா்களைத்தான் கண்டது. எந்த வளா்ச்சியும் காணப்படவில்லை.

மாநிலத்தின் பிரச்னைகளுக்கு பாஜக அரசு தீா்வு காணவில்லை. மாறாக, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துவிட்டன. தேவபூமியான உத்தரகண்ட் மாநிலத்தை பாஜக அவமதித்துவிட்டது. மாநிலத்தில் அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ள பாஜகவை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது என்றாா் அவா்.

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலாவும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘பாஜகவின் பதவி ஆசை, அரசியல் நிலையற்ற தன்மை, தோல்வி அடைந்த தலைமை ஆகியவற்றுக்கு இதுவே உதாரணம். மக்களுக்குச் சேவை செய்வதற்குப் பதிலாக, ஆட்சியதிகாரத்தைப் பகிா்ந்துகொள்வதற்கு அவா்கள் முயற்சி செய்கிறாா்கள். இதற்கு பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகிய இருவரும் பொறுப்பாவா். கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள இயற்கை வளங்களை அவா்கள் சுரண்டி விட்டனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.