விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கரோனாவுக்கு எதிரான போரில் முடிந்தவற்றை உலகுடன் பகிர்ந்துள்ளோம்: பிரதமர் மோடி

கரோனாவுக்கு எதிரான போரில் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் எங்களால் முடிந்தவற்றை நாங்கள் உலகுடன் பகிர்ந்துள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :5 ஜூலை 2021, 11:05 am

DIN


கரோனாவுக்கு எதிரான போரில் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் எங்களால் முடிந்தவற்றை நாங்கள் உலகுடன் பகிர்ந்துள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

கோவின் உலகளாவிய கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பங்கேற்றார். அனைத்து நாடுகளிலும் கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

இதன்பிறகு அவர் பேசியது:

“கரோனா பெருந்தொற்றுக்கு இணையாக 100 ஆண்டுகளில் எந்தவொரு பெருந்தொற்றும் ஏற்பட்டதில்லை. எத்தகைய வலிமையான நாடாக இருந்தாலும் எந்தவொரு நாட்டினாலும் இந்த சவாலை தனியாக எதிர்கொள்ள முடியாது என்பதை அனுபவம் உணர்த்தியுள்ளது.

அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் எங்களால் முடிந்தவற்றை உலகுடன் பகிர முயற்சித்துள்ளோம்.

கரோனாவுக்கு எதிரான எங்களது போரில் தொழில்நுட்பம் முக்கியமானது. அதிர்ஷ்டவசமாக மென்பொருள் துறையின் வளங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. பெருந்தொற்றிலிருந்து வென்று மீண்டு வர தடுப்பூசி ஒன்றே பெரும் நம்பிக்கை.

தடுப்பூசிக் கொள்கைக்கான திட்டத்தை வகுக்கும்போதிலிருந்தே முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையைக் கையாள நாங்கள் முடிவு செய்தோம்.

ஒட்டுமொத்த உலகையும் ஒரே குடும்பமாகக் கருதுவதே இந்திய நாகரிகம். பலரது மனதில் இந்தத் தத்துவத்தின் அடிப்படை உண்மையை பெருந்தொற்று காலம் உணரச் செய்துள்ளது.

இதனால்தான், ‘கோவின்’ என அழைக்கப்படும் கரோனா தடுப்பூசிக்கான எங்களது தொழில்நுட்ப தளத்தை வெளிப்படைத்தன்மையுடன் உருவாக்கியுள்ளோம்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.