

சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
இதனால், மத்திய அமைச்சரவை இந்த வாரத்திலேயே மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் கடந்த சில வாரங்களாக பரவி வரும் நிலையில், பிரதமா் மோடியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், பாஜக பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷும் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனா்.
இந்தச் சந்திப்பின்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துக்கு இறுதிவடிவம் அளிக்கப்பட்டதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட்டால், இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு மேற்கொள்ளப்படும் முதல் விரிவாக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.