இன்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து
இன்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் சூழலில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருந்தது. வழக்கமாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமைகளில் நடப்பது வழக்கம்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாம் முறை பதவியேற்ற பிறகு, முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடப்பதாக இருந்தது.
இதற்கிடையே இன்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி அறிவித்த மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி, தீபாவளி வரை இலவச உணவு தானியங்கள் உள்ளிட்டவை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...