
கோவாவில் 100 சதவீத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திய பிறகு தான் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும் என முதல்வர் பிரமோந்த் சாவந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது,
கோவாவில் உள்ள 100 சதவீத மக்களுக்கும் அக்டோபர் அல்லது நவம்பர் இறுதிக்குள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 100 சதவீத மக்களுக்கு ஒரு தவணை தடுப்பூசியாது செலுத்திய பின்பு தான் சுற்றுலாத் தலங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்.
கோவாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 8 லட்சம் பேருக்கு முதல் தவணை போடப்பட்டுள்ளது. தற்போது வரை 76 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் ஜூலை 30க்குள் அனைவருக்கும் முதல் தவணை செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கோவாவில் ஜூலை 12 வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.