92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஜூலை 17இல் டோக்கியோ புறப்படுகிறது இந்திய ஒலிம்பிக் அணி

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களைக் கொண்ட குழு ஜூலை 17ஆம் தேதி டோக்கியோ புறப்பட உள்ளதாக இந்திய ஒலிம்பிக் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image

ஜூலை 17இல் டோக்கியோ புறப்படுகிறது இந்திய ஒலிம்பிக் அணி

Updated On :9 ஜூலை 2021, 7:01 am

DIN

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களைக் கொண்ட குழு ஜூலை 17ஆம் தேதி டோக்கியோ புறப்பட உள்ளதாக இந்திய ஒலிம்பிக் ஆணையம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனையடுத்து ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகளை ஜப்பான் நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள், பயிற்சியாளர்களைக் கொண்ட குழு ஆயத்தமாகி வருகிறது. ஜூலை 17ஆம் தேதி ஏர் இந்தியா தனிவிமானத்தில் டோக்கியோ புறப்படும் இந்திய அணி ஜப்பான் அரசின் புதிய வழிகாட்டுதலின்படி 3 நாள்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளது. 

அதனைத் தொடர்ந்து வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பர் என இந்திய ஒலிம்பிக் ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும் தற்போதைய சூழலில் இந்திய ஒலிம்பிக் அணிக்கான பயண ஒப்புதலை ஜப்பான் அரசு வழங்கவில்லை எனவும் விரைவில் ஜப்பான் அரசின் ஒப்புதல் கிடைத்துவிடும் என்பதையும் இந்திய ஒலிம்பிக் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.