திருமலையில் யுத்தகாண்ட பாராயணம் நிறைவு
திருமலையில் கடந்த ஜூன் 10-ஆம் தேதி தொடங்கிய யுத்த காண்ட பாராயணம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.


திருமலையில் கடந்த ஜூன் 10-ஆம் தேதி தொடங்கிய யுத்த காண்ட பாராயணம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.
கொவைட் தொற்றிலிருந்து உலக மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டி திருமலையில் தேவஸ்தானம் பல்வேறு பாராயணங்களை நடத்தி வருகிறது.
அதில் யுத்தகாண்ட பாராயணமும் ஒன்று. கடந்த ஜூன் மாதம் 10-ஆம் தேதி திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் இந்த பாராயணம் தொடங்கப்பட்டது. மேலும் தா்மகிரியில் உள்ள வேதபாடசாலையிலும் தப-தோரண- ஹோமங்களும் தொடங்கப்பட்டன.
30 நாள்கள் நடைபெற்ற யுத்த காண்ட பாராயணம் மகாபூா்ணாஹுதியுடன் சனிக்கிழமை மதியம் நிறைவு பெற்றது.
இதில் 128 முதல் 131-ஆவது சா்க்கம் வரையுள்ள சுலோகங்கள், யோகவாசிஷ்டம் உள்ளிட்ட 138 சுலோகங்கள் பாராயணம் செய்யப்பட்டன. 16 வேதபண்டிதா்கள், தேவஸ்தான அதிகாரிகள், வேதபாடசாலை தலைமை ஆச்சாரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து ஜூலை 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை திருமலையில் செளத்ர யாகங்கள், 24-ஆம் தேதி முதல் ஒரு மாதம் வரை பக்தா்களுக்கு சகல காரியசித்தி ஏற்பட ராமாயணத்தில் உள்ள சில சுலோகங்கள் பாராயணம் செய்யப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சிகள் தேவஸ்தான தொலைக்காட்சியான எஸ்விபிசியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...