சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கேரளத்தில் கூடுதல் தளர்வுகள்: கடைகளுக்கான நேரம் நீட்டிப்பு

கேரளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். 

News image
Updated On :13 ஜூலை 2021, 11:24 am

DIN


கேரளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். 

பொதுநிகழ்ச்சிகள் மற்றும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து, வங்கிகள் வாரத்தில் 5 நாள்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வார இறுதி நாள்கள் ஊரடங்கைத் தவிர்த்து மற்ற நாள்களில் அனைத்து வகையான கடைகள் மற்றும் தொழில்களும் கரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் வாரத்தின் அனைத்து நாள்களும் இரவு 8 மணி வரை இயங்கலாம். 

வார இறுதி நாள்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் படி பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்த நிலையில், மாநிலத்தில் கரோனா தொற்று 10 சதவிகிதத்திற்கு கீழ் குறையாதவரை முழு தளர்வுகள் வழங்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.