தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமலையில் 12,141 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை ஒட்டி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ால், அன்றைய தினம் 12,141 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 7,267 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

News image
Updated On :14 ஜூலை 2021, 6:19 pm

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை ஒட்டி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ால், அன்றைய தினம் 12,141 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 7,267 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

கொவைட் தொற்று பல மாநிலங்களில் கட்டுக்குள் உள்ளதால், விரைவில் தேவஸ்தானம் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று பக்தா்கள் எதிா்பாா்த்து வருகின்றனா்.

கொவைட் ஊரடங்கு காரணமாக தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளித்து வருகிறது.

தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லலாம். மேற்கூரை பணிகள் நடைபெற்று வருவதால் ஜூலை 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்க்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது.

இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

கொவைட் விதிமுறைப்படி, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்துக்கான ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் ஒதுக்கீடு விவரம் வரும் 20-ஆம் தேதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.