பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மேக்கேதாட்டு விவகாரம்: 4 மாநில முதல்வர்களுடன் பேச முடிவு

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

News image
கஜேந்திர சிங் ஷெகாவத்
Updated On :14 ஜூலை 2021, 6:05 am

DIN

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே அணை கட்டுவது சுமூகமாக பேசி முடிவு காணும் வகையில் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. 

தமிழ்நாட்டி எல்லையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் தென்பகுதிகளிலுள்ள மற்ற மாநிலங்களில் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதனால் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மற்ற மாநிலங்களும் மாற்று கருத்துக்களை முவைத்து வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சுமூக முடிவு காணும் வகையில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழகம் ஆகிய நான்கு மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய நீர்வளத் துறை அமைச்சை கஜேந்திர சிங் ஷெகாவத் திட்டமிட்டுள்ளார். 

4 மாநிலங்களின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படியில் மேக்கேதாட்டு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.