‘பிரதமர் நேரம் ஒதுக்கினால் சந்திப்பேன்’: மம்தா

பிரதமர் நேரம் ஒதுக்கினால் அவரை சந்திப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் நேரம் ஒதுக்கினால் அவரை சந்திப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பேசுகையில்,

மாநிலத்தில் தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளது. ஆகையால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, தில்லி சென்று சில தலைவர்களை சந்திக்கவுள்ளேன். குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நேரம் ஒதுக்கினால் அவர்களையும் சந்திப்பேன்.

மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்க மூன்று திட்டங்களை அறிவிக்கவுள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திட்டங்கள் கொண்டுவரவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

எங்கள் மாநிலத்திற்கு 14 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றது. ஆனால், 2.12 கோடி கரோனா தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், 18 லட்சம் தடுப்பூசிகளை நாங்கள் வாங்கியுள்ளோம். சில மாநிலங்களுக்கு அதிகளவிலான தடுப்பூசிகள் கிடைக்கின்றது, சில மாநிலங்களுக்கு கிடைப்பதில்லை.

மேலும், உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தை பின்பற்றாதது பிரதமருக்கு தெரியும். ஹாத்ராஸ் சம்பவம் போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது, அங்கு எவ்வளவு முறை ஆணையத்தை விசாரணைக்காக அனுப்பியுள்ளார்? மேற்கு வங்கத்திற்கு தவறான பெயரை பெற்று தருகின்றனர். அதிகளவிலான வன்முறைகள் வாக்குப்பதிவுக்கு முன்பே நடைபெற்றவை, ஆனால் வாக்குப் பதிவுக்கு பின்பு எனக் கூறப்படுகிறது.

மனித உரிமைகள் ஆணையம், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு வழங்குவதற்கு முன்பே வெளியே கூறிவிட்டார்கள். இது நீதிமன்ற அவமதிப்பாகும். மேற்கு வங்க மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலாகும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜூலை 19-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com