காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் நவ்ஜோத் சிங் சித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங், மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது.
இதனால், சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு மாறவுள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியான நிலையில், சமரசப் பேச்சு வார்த்தையை மேற்கொள்ள தேசிய தலைவர்கள் களமிறங்கினர்.
பஞ்சாப் பேரவைத் தேர்தலில் அடுத்த முதல்வர் வேட்பாளராக அமரீந்தரும், மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவும் நியமனம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இன்று மாலை சித்துவை பஞ்சாப் தலைவராக நியமித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தில்லி சென்றுள்ள சித்து, கட்சியின் இடைக்கால தலைவர் சோனிய காந்தியுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரீஸ் ராவத்தும் பங்கேற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


