ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

யோகி அரசின் கொடூரத்தை பிரதமரின் நற்சான்றிதழ் மறைத்துவிடாது - பிரியங்கா காந்தி

வாராணசிக்கு சென்ற பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச அரசு கரோனாவை சிறப்பாக கையாண்டதாக தெரிவித்திருந்தார்.

News image
பிரியங்கா காந்தி
Updated On :16 ஜூலை 2021, 9:31 am

DIN

வாராணசிக்கு சென்ற பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச அரசு கரோனாவை சிறப்பாக கையாண்டதாக தெரிவித்திருந்தார்.

வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று (வியாழக்கிழமை) உத்தரப் பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது, கரோனா இரண்டாம் அலையை உத்தரப் பிரதேச அரசு சிறப்பாக கையாண்டது என தெரிவித்திருந்தார். கரோனா இரண்டாம் அலையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

மோடியின் கருத்தை விமரிசித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "பிரதமரின் நற்சான்றிதழால் யோகி அரசின் கொடூரம், அலட்சியபோக்கு, தவறான மேலாண்மை ஆகியவை  மறைந்துவிடாது" என்றார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் பெரிய அளவில் இன்னல்களை சந்தித்தனர். உதவியின்றி தவித்தனர். மோடியும் யோகியும் இதை மறந்திருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் மறந்துவிடவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலானது கங்கை நதிக்கரைகளில் கேட்பாரற்று கிடந்தது. உத்தரப் பிரதேசத்தில் கரோனாவால் பலியானவர்களின் உறவினர்களே அந்த உடல்களை கங்கை நதிக்கரைகளில் விட்டு சென்றதாகக் கூறப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.