ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கடுமையான கேள்விகளை எழுப்புங்கள்; ஆனால்..: மோடியின் வேண்டுகோள்

நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் அவைகளில் மிகக் கடுமையான, சிந்திக்கும் வகையிலான கேள்விகளை எழுப்புங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

News image
கடுமையான கேள்விகளை எழுப்புங்கள்; ஆனால்..: மோடியின் வேண்டுகோள்
Updated On :19 ஜூலை 2021, 6:44 am

DIN


புது தில்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் அவைகளில் மிகக் கடுமையான, சிந்திக்கும் வகையிலான கேள்விகளை எழுப்புங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை காலை தொடங்கியது.

இந்தக் கூட்டத்தொடரில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

17-ஆவது மக்களவையின் 6-ஆவது கூட்டத்தொடரான இந்த மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், நோய்தொற்றுக்கான சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தொடா் வழக்கமான நேரமான காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.

கூட்டத்தொடரின் முதல் நாளில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் மழை பெய்து வரும் நிலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே குடை பிடித்தபடி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இரு அவைகளிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சியினரும் கடுமையான மற்றும் சிந்திக்கும் வகையிலான கேள்விகளை எழுப்புங்கள். ஆனால், அமைதியான முறையில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும், 

மழைக்கால கூட்டத் தொடரை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

நாட்டு மக்கள் சார்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது, அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கவும் தயாராக உள்ளது. அதே வேளையில் மத்திய அரசு கூறும் விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று மோடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.