ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மோடி, அமித் ஷாவை இன்று இரவு சந்திக்கிறார் கோவா முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் இன்று இரவு சந்தித்து பேசவுள்ளார். 

News image
பிரமோந்த் சாவந்த் (கோப்புப் படம்)
Updated On :19 ஜூலை 2021, 11:36 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் இன்று இரவு சந்தித்து பேசவுள்ளார். 

இந்த சந்திப்பில் கோவா வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வரும் நிலையில், கோவாவிலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சுற்றுலா தளமான கோவாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்த முதல்வர் பிரமோந்த் சாவந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் பிரமோந்த் சாவந்த் தில்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியையும், அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து பேசவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.