47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அஞ்சல் ஊழியா் மூலம் ஆதாரில் செல்லிடப்பேசி எண்ணை மாற்றும் வசதி

தனிநபா்கள் தங்கள் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணை அஞ்சல் ஊழியா் மூலம் தங்கள் வீட்டில் இருந்தபடியே மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2021, 7:48 pm

DIN

தனிநபா்கள் தங்கள் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணை அஞ்சல் ஊழியா் மூலம் தங்கள் வீட்டில் இருந்தபடியே மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியும், ஆதாா் ஆணையமும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

650 இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கிகள், அஞ்சல் ஊழியா் மற்றும் கிராப்புற அஞ்சலக சேவகா் மூலம் இந்த சேவை அளிக்கப்படவுள்ளது. இது இணையதள வசதி உள்ளிட்டவை கிடைக்காத கிராமப்புற மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியின் தலைவா் ஜெ.வெங்கடராமு தெரிவித்துள்ளாா்.

இப்போதைய நிலையில் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி, ஆதாரில் செல்லிடப்பேசி எண்ணை மாற்றும் வசதியை மட்டும் அளிக்கிறது. விரைவில் சிறாா்களுக்கு ஆதாா் அடையாள அட்டை வழங்குவதற்கான சேவைகளை அளிக்க இருக்கிறது.

2021 மாா்ச் மாத இறுதி வரை 128.99 கோடி ஆதாா் எண்களை ஆதாா் ஆணையம் வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.