நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநர் சிவ நாடார் ராஜிநாமா

ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநர் சிவ நாடார் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஜயகுமார், நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

News image

சிவ நாடார்

Updated On :20 ஜூலை 2021, 12:01 pm

ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநர் சிவ நாடார் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஜயகுமார், நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

பிரபல முன்னணி மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனத்தை சிவ நாடார் தனது நண்பர்களுடன் கடந்த 1976 ஆம் ஆண்டு தொடங்கினார். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 

இந்நிறுவனத்தில் சிவ நாடாருக்கு 60%க்கும் அதிகமான பங்குகள் உள்ளன. 45 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தை  நடத்தி வந்த இவர், நிர்வாக இயக்குநர் பதவியை நேற்று ராஜிநாமா செய்துள்ளார். தற்போது அவருக்கு வயது 76. 

எனினும் அவர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவின் ஆலோசகராகத் தொடர்ந்து செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவ நாடார் ராஜினாமா செய்ததையடுத்து, தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஜயகுமார், நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

இந்தியாவில் தற்போது மூன்றாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக ஹெச்.சி.எல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.