குழந்தைகளின் மன நலன் மற்றும் உடல் நலனைப் பெருந்தொற்று எவ்வாறு பாதித்துள்ளது? அதன் நீண்ட கால தாக்கத்தை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளின் மனநலன் மற்றும் உடல்நலனில் பெருந்தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஒரு ஆண்டுக்கும் மேலாக குழந்தைகள் வீட்டிலேயே அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் பாதிப்பு, பெற்றோருக்கு ஊதியக் குறைப்பு போன்றவற்றால் மன அழுத்தம் அதிகரித்துள்ளது.
வித்தியாசமாக நடந்து கொள்வதன் வாயிலாக உளவியல் ரீதியான பாதிப்பை குழந்தைகள் வெளிப்படுத்தக் கூடும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் நடந்துக் கொள்வார்கள். ஒரு சிலர் திடீரென அமைதியாக இருப்பார்கள், வேறு சிலர் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.