கேரளத்தில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் 12-ஐத் தாண்டியது
கேரளத்தில் புதிதாக 12,818 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கேரளத்தில் புதிதாக 12,818 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 32,18,015 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,03,543 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 12 சதவிகிதத்தைத் தாண்டி 12.38 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. ஜூலை 19-க்குப் பிறகு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 11 சதவிகிதத்தைத் தாண்டியது.
மேலும் 122 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 15,739 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், 13,454 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 30,72,895 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,28,881 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 623 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...