கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏர் இந்தியாவின் ஊழியர்கள் 56 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக மக்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே.சிங் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றது.இந்நிலையில், மக்களவையின் நான்காம் நாள் கூட்டமான இன்று கேள்வி நேரத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே.சிங், ஏர் இந்தியா விமான ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து பதிலளித்தார்.
“ஏர் இந்தியா ஊழியர்கள் இதுவரை 3,523 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நிரந்தர பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சமும், தற்காலிக பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 90 ஆயிரம் அல்லது இரு மாத ஊதியமும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஏர் இந்தியா விமான ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊழியர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டால் 17 நாள்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனாவால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப். 28 வரை மழைக்கு வாய்ப்பு

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


