நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதன்முறையாக வங்கதேசத்துக்கு 200 மெட்ரிக் டன் பிராண வாயு

முதல்முறையாக, இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு 200 மெட்ரிக் டன் பிராண வாயு அனுப்பப்படுகிறது.

News image
Updated On :24 ஜூலை 2021, 7:04 pm

DIN

முதல்முறையாக, இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு 200 மெட்ரிக் டன் பிராண வாயு அனுப்பப்படுகிறது.

இந்திய ரயில்வேயின் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கின்றன. ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அண்டை நாடுகளுக்கு பயணிப்பது இதுவே முதல் முறையாகும். 200 மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயுவை வங்கதேசத்தின் பேனாபோலிற்கு எடுத்துச் செல்வதற்காக தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்கும் சக்ரதா்பூா் பிரிவில் (ஜாா்க்கண்ட் மாநிலம்) முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 10 கொள்கலன்களில் 200 மெட்ரிக் டன் மருத்துவ பிராண வாயுவை நிரப்பும் பணி சனிக்கிழமை காலை 09.25 மணிக்கு நிறைவடைந்தது.

இந்திய மாநிலங்களுக்கு தேவைப்படும் மருத்துவ பிராண வாயுவை கொண்டு சோ்ப்பதற்காக கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 15 மாநிலங்களுக்கு 480 ரயில்களில் சுமாா் 35,000 மெட்ரிக் டன் பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ரயில் மூலம் வங்கதேசத்துக்கு பிராண வாயு அனுப்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.