பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு
பிரதமர் மோடியை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சந்தித்து வருகின்றனர்.


பிரதமர் மோடியை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சந்தித்து வருகின்றனர்.
தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. சசிகலா விவகாரம், அரசியல் சூழல், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் விவாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், தம்பிதுரை, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி., உள்ளிட்டோரும் பிரதமர் சந்திப்பில் உடன் உள்ளனர்.

இதனிடையே பிரதமரை சந்திப்பதற்காக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் நேற்று தனித்தனியாக தில்லி புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...