கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கர்நாடகத்தில் புதிதாக 2,052 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,052 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கர்நாடகத்தில் புதிதாக 2,052 பேருக்கு கரோனா தொற்று

Updated On :29 ஜூலை 2021, 2:12 pm

DIN

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,052 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கரோனா பாதிப்புகள் நிலவரம் பற்றிய தரவுகள் மாநில சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக 2,052 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

மேலும் 1332 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 35 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,01,247 ஆக உயர்ந்துள்ளது. இதில்28,41,479 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 36,491 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 23,253 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.