பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
/

இந்திய - சீன எல்லை பிரச்னை: 12ஆம் கட்ட பேச்சுவார்த்தை

இந்திய, சீன நாடுகளுக்கிடையேயான 12ஆவது கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கியது.

News image

கோப்புப்படம்

Updated On :31 ஜூலை 2021, 2:02 pm IST

இந்திய, சீன நாடுகளுக்கிடையேயான 12ஆவது கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கியது.

இந்திய, சீன எல்லையான கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் ராணுவ வீரர்களை திரும்ப பெறுவது தொடர்பாக இரு நாட்டு உயர் மட்ட ராணுவ அலுவலர்களுக்கிடையே இன்று (சனிக்கிழமை) 12ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் ரீதியான பேச்சுவார்த்தை சீன எல்லைப்பகுதியான மோல்டோவில் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கியது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, பாங்காங் ஏரி கரையிலிருந்து இரு நாட்டு ராணுவமும் தங்களின் வீரர்களை ஏற்கனவே திரும்பபெற்றது.

கிழக்கு லடாக் பகுதியில் சீனா தாக்குதல் நடத்திய பிறகு, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டனர். இதன் காரணமாக, அங்கு ராணுவ வீரர்கள் திரும்பபெறுவதில் சிக்கல் நிலவிவருகிறது. 

கடந்த ஓராண்டு காலமாக அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக, கடந்த மாதம் சர்ச்சைக்குரிய பாங்காங் ஏரி பகுதியிலிருந்து ராணுவ வீரர்கள் திரும்பபெறப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.