அசாம் - மிசோரம் பிரச்னை: முதல்வருக்கு எதிராக வழக்குப் பதிவு

அசாம், மிசோரம் மாநிலங்களுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எல்லை பிரச்னை தொடர்பாக அசாம், மிசோரம் மாநில காவல்துறையினருக்கிடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு காவலர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இரண்டு மாநிலங்களுக்கிடையே தொடர் மோதல் போக்கு நிலவிவருகின்றது. இந்நிலையில், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மாநிலத்தின் உயர் காவல்துறை அலுவலர்களுக்கு எதிராக மிசோரம் காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோலாசிப் மாவட்ட வைரங்க்டே காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்றபோது ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் உத்தரவின்படி அசாம் காவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல் தகவல் அறிக்கையில், "மிசோரம் காவலர்களின் முகாமை ஆக்கிரமிக்கும் நோக்கில் கூடாரம் கட்ட பயன்படும் பொருள்களுடன் சம்பவ இடத்திற்கு மருத்துவ அவசர ஊர்தி உள்பட கிட்டத்தட்ட 20 வாகனங்கள் வந்தது. அசாம் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே அவர்கள் அங்கு வந்தனர்.

அசாம் காவல்துறை தலைவர், காவல்துறை துணை தலைவர், காவல் கண்காணிப்பாளர், சச்சார் மாவட்ட காவல்துறை துணை ஆணையர் என 200 காவல்துறை அலுவலர்களின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் உள்ள அனைத்து அலுவலர்களும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முன்பாக வைரங்க்டே
காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆறு காவல்துறை அலுவலர்களுக்கு மிசோரம் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதேபோல், மிசோரம் அரசின் உயர் மற்று அலுவலர்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் வனல்வேனாவுக்கும் அசாம் காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com