ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உ.பி.யில் 300 இடங்களில் பாஜக வெல்லும்: துணை முதல்வர்

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவைச் சந்தித்து பாஜக தேசியப் பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆலோசனை நடத்தினார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 ஜூன் 2021, 10:07 am

DIN


உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவைச் சந்தித்து பாஜக தேசியப் பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

கட்சியின் அமைப்பு குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது.

இந்த சந்திப்புக்குப் பிறகு மௌரியா செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

"கட்சியின் அமைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2022-இல் வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பெறவுள்ளோம். இந்த முறையும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். கட்சித் தொண்டர்கள் மக்களைச் சென்றடைவது பற்றியும் ஆலோசனை நடத்தினோம்" என்றார் அவர்.

கட்சிப் பணிகள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங்குடன் இணைந்து மூத்த தலைவர்களை பி.எல். சந்தோஷ் சந்தித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.