
உத்தரப் பிரதேசத்தில் திக்ரி கிராமத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் நூருல் ஹசனின் வீட்டில் எல்பிஜி சிலிண்டர் வெடித்துள்ளது. இதனால் இரட்டை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்தது.
இதில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர், இவர்கள் மேல் சிகிச்சைக்காக லக்னௌவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் எட்டு பேர் உயிரிழந்தனர் என்று மாவட்ட நீதிபதி மார்க்கண்டே ஷாஹி தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் நிசார் அகமது (35), ரூபினா பானோ (32), ஷம்ஷாத் (28), சைருனிஷா (35), ஷாபாஸ் (14), நூரி சபா (12), மேராஜ் (11), முகமது ஷோயாப் (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் மிஸ்ரா கூறுகையில்,
சம்பவம் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்தை அடைந்தனர். தடயவியல் குழுக்கள் மாதிரிகளைச் சேகரித்து வருகின்றன, மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, காயமடைந்தவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நீதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.