ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 3 பேர் பலி

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டம் அருகே நேர்ந்த சாலை விபத்தில் மூன்று பேர் பலியாகினர். இருவர் காயமடைந்தனர்.
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 3 பேர் பலி
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 3 பேர் பலி
Updated on
1 min read


ஜம்மு: ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டம் அருகே நேர்ந்த சாலை விபத்தில் மூன்று பேர் பலியாகினர். இருவர் காயமடைந்தனர்.

டிக்டோல் என்ற பகுதியில், ஆறு பேருடன் சாலையில் வந்து கொண்டிருந்த வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தில் வந்த மற்றொரு நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த மீட்புப் பணியில் ராணுவத்தினரும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபட்டு வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com