மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

'வரி வசூல்' தொற்றுநோயின் அலைகள் வந்துகொண்டிருக்கின்றன: ராகுல் காந்தி

நாட்டில் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :7 ஜூன் 2021, 9:33 am

DIN

நாட்டில் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர், பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் செலுத்திவிட்டு பில் வாங்கும்போது மோடி அரசின் பணவீக்கம் அதிகரித்துள்ளது குறித்து அறிவீர்கள். 'வரி வசூல்' தொற்றுநோயின் அலைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. நாட்டில் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை ரூ. 100 யைக் கடந்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.