ஜம்மு: ஜம்மு நகரின் மிக முக்கியப் பகுதியான விக்ரம் சௌக் அருகே அமைந்திருக்கும் பழைய ஜம்மு ரயில் நிலையம் பாரம்பரிய சின்னமாக மாற்றப்பட உள்ளது.
பொலிவுறு நகர திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் வகையில், விக்ரம் சௌக் ரயில் நிலையத்தை, பாரம்பரிய சின்னமாக மாற்றி சுற்றுலாத் தலமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மண்டல ஆணையர் தெரிவித்துள்ளார்.
1897ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஜம்மு ரயில் நிலையம், பல்வேறு காலக்கட்டத்துக்குப் பிறகு பயன்பாட்டில் இல்லாமல் போனது. இதையடுத்து, தற்போதிருக்கும் இந்த பழைய ரயில் நிலையத்தின் கட்டுமானங்களை அப்படியே சீரமைத்து புராதனச் சின்னமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
இதற்காக, இந்த ரயில் நிலையத்தின் பழைய புகைப்படங்கள் தேடி எடுக்கப்பட்டு, அதனை அப்படியே மீண்டும் உருவாக்க நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

உதயநிதிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை பதில் மனு தாக்கல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


