மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

கர்நாடகத்தில் புதிதாக 7,345 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் புதிதாக 7,345 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2021, 2:55 pm

DIN


கர்நாடகத்தில் புதிதாக 7,345 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் குறித்து செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக 7,345 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,84,355 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 17,913 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,99,472 பேர் குணமடைந்துள்ளனர்.

148 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 33,296 ஆக உயர்ந்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி 1,51,566 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

15-ம் தேதி மட்டும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 4.35 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.01 சதவிகிதம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.