தில்லி சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை இடதுசாரி கட்சித் தலைவர்களான சீத்தாராம் யெச்சூரி மற்றும் து.ராஜா ஆகியோரை சந்தித்து பேசினார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தில்லி சென்றுள்ளார். இந்த பயணத்தில் பிரதமர் மோடியை வியாழக்கிழமை சந்தித்த அவர் 25 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அவரிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை தமிழ்நாடு இல்லத்தில் சிபிஐஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் சிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் து.ராஜா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசியல் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசுகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


