
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் கணக்கு வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “அமெரிக்க டிஜிட்டல் பதிப்புரிமை சட்ட விதிகளை பின்பற்றாததால் எனது சுட்டுரைக் கணக்கு சில மணி நேரங்களுக்கு முடக்கப்பட்டது. எனினும் பின்னர் மீண்டும் இயங்கத் தொடங்கியது” எனத் தெரிவித்தார்.
மேலும் முன்னறிவிப்பின்றி தனது சுட்டுரைக் கணக்கு முடக்கப்பட்டது சட்டவிரோதமானது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் சட்ட விதிகளை ஏற்காததால் சுட்டுரை நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சட்ட உதவிகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.