தில்லியில் மீண்டும் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

தில்லியில் இன்று விவசாயிகளின் டிரேக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால்,  எல்லைகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தில்லியில் மீண்டும் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

தில்லியில் இன்று விவசாயிகளின் டிரேக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால்,  எல்லைகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் 200 நாள்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இன்று தில்லியில் டிராக்டர் பேரணி நடைபெற உள்ளதாக விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். இதற்கான ஒத்திகைகள் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், ஹரியாணா, பஞ்சாப், உத்தரப்பிரதேச விவசாயிகள் உள்பட ஏராளமான விவசாயிகள் தில்லி காசியாபாத், சிங்கு, திக்ரி எல்லைகளில் குவிந்து வருகின்றனர். 

இதனால் தில்லி எல்லைகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு பலத்த சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து தில்லியின் மூன்று முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது.

கடந்த ஜனவரி 26ஆம் தேதி நடந்த டிரேக்டர் பேரணியின் போது வன்முறை ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர், இந்நிலையில், அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் இன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், தொழிற்சங்கங்கள் தலைமையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல மாநிலங்களில் ஆளுநரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com