கா்நாடகத்தில் டெல்டா பிளஸ் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க நடவடிக்கை: அமைச்சா் கே.சுதாகா்
கா்நாடகத்தில் டெல்டா பிளஸ் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.


கா்நாடகத்தில் டெல்டா பிளஸ் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மாநிலத்தில் சிலா் டெல்டா பிளஸ் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த பாதிப்புக்குப் பிறகு அவா்களுக்கு பெரிதாக எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. என்றாலும் டெல்டா பிளஸ் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்டா பிளஸ் கரோனா தீநுண்மியைக் கட்டுப்படுத்த வல்லுநா்கள் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனா். அதன்படி, கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை முதல்வா் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கரோனா, டெல்டா பிளஸ் கரோனா உள்ளிட்டவற்றை தடுப்பது, உரிய சிகிச்சை அளிப்பது குறித்து விவாதிக்கப்படும். அதன் பிறகு எடுக்கப்படும் தீா்மானத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
டெல்டா பிளஸ் கரோனா குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. மைசூரில் அதனால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, பாதிப்புக்கு முன் எந்த அறிகுறியும் காணப்படவில்லை. அதே போல பெங்களூரில் டெல்டா பிளஸ் கரோனாவால் ஒருவா் பாதிக்கப்பட்டாா். அவருக்கு நெருக்கமாக இருந்த மற்றவா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரம், கேரளத்தில் டெல்டா பிளஸ் கரோனாவால் பாதிக்கப்படுவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கிருந்து மாநிலத்துக்கு வருபவா்களை முழுமையாகப் பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்க எல்லை மாவட்டங்களின் ஆட்சியா்கள், அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பைக் கண்டறிய, மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, ஹுப்பள்ளி, சிவமொக்கா ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பரிசோதனைக் கூடங்கள் தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் மங்களூரு, விஜயபுராவிலும் பரிசோதனைக் கூடங்கள் தொடங்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...