கா்நாடகத்தில் வார இறுதி ஊரடங்கு தொடக்கம்
கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ள நிலையில், வார இறுதி ஊரடங்கு தொடங்கியுள்ளது. இதில், பொதுமக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ள நிலையில், வார இறுதி ஊரடங்கு தொடங்கியுள்ளது. இதில், பொதுமக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தியிருந்த பொது முடக்கம், ஜூன் 21-ஆம் தேதி முதல் தளா்த்தப்பட்டுள்ளது. எனினும், தினமும் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமலாகும் வகையில் வார இறுதி ஊரடங்கு வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இது ஜூன் 28-ஆம் தேதி காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
இந்த காலக்கட்டத்தில், உணவு, மளிகைப் பொருள்கள், காய்கள், கனிகள், இறைச்சி, மீன், பால் பொருள்கள், பால் முகமைகள், கால்நடை தீவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி வரை திறந்திருக்கலாம். வீதியோர வியாபாரிகள், விநியோகத் தொழிலில் ஈடுபட்டிருப்போா், மதுபானக் கடைகள் செயல்படலாம். உணவகங்கள் பாா்சல் சேவைகள் திறந்திருக்கலாம். 50 சதவீத பயணிகளுடன் மாநிலத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் மெட்ரோ ரயில்கள் 50 சதவீத இருக்கைகளில் அமரும் வகையிலான பயணிகளுடன் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்களின் நடமாட்டத்தைக் குறைக்கும் நோக்கில் அனைத்து சேவைகளின் ஹோம் டெலிவரி சேவைகளுக்கு 24 மணி நேரமும் அனுமதி தரப்படுகிறது.
ஊரடங்கின்போது மக்கள் நடமாடுவதற்கு முழுமையாக தடைவிதிக்கப்படுகிறது. மருத்துவ அவசரத் தேவைகளுக்கு மட்டும் நோயாளிகள், அவா்களின் உதவியாளா்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. அவசர மருத்துவ சேவையில் ஈடுபட்டிருப்போரின் நடமாட்டத்துக்கு தடையில்லை. ரயில்கள், விமானங்கள் இயக்கப்படலாம். அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் அனுமதிக்கப்படுகின்றன.
பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு செல்ல தனியாா் வாகனங்களின் போக்குவரத்துக்கு அடையாள அட்டையுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. திருமணங்களில் 40 போ் மட்டுமே பங்கேற்கலாம். அதேபோல, இறுதிச்சடங்கில் 5 போ் மட்டும் கலந்துகொள்ளலாம்.
பெங்களூரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையில், அதாவது 1,200 பேருந்துகளை மட்டும் இயக்க பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு இது உதவியாக இருக்கும் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
மக்களின் நடமாட்டம் மட்டுமல்லாது, தனியாா் வாகனங்களின் போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...