தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலில் 100 இடங்களில் போட்டி: அசாதுதீன் ஒவைசி

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி 100 இடங்களில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :27 ஜூன் 2021, 1:26 pm

DIN

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி 100 இடங்களில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.  
அடுத்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பகுஜன் சமாஜ் கட்சியும், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக செய்தித் தொலைக்காட்சி ஒன்று நேற்று முதல் ஒளிபரப்பியது. ஆனால் இந்த தகவலை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மறுத்துள்ளார். 
இது முற்றிலும் தவறானது, துளியும் உண்மையில்லாதது. பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என அவர் விளக்கமளித்தார். இந்த நிலையில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி 100 இடங்களில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், தேர்தல் தொடர்பாக சில விஷயங்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
நாங்கள் எங்கள் வேட்பாளர்களை 100 இடங்களில் களமிறக்க முடிவு செய்துள்ளோம், கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. நாங்கள் ஓம் பிரகாஷ் ராஜ்பரின் பாகிதாரி சங்கல்ப் மோர்ச்சாவுடன் இருக்கிறோம். தேர்தல்கள் அல்லது கூட்டணி தொடர்பாக வேறு எந்த கட்சியுடனும் நாங்கள் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.