ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

முன்னாள் ராணுவ வீரர்களின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

முன்னாள் ராணுவ வீரர்களின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

News image
Updated On :27 ஜூன் 2021, 11:19 am

DIN

முன்னாள் ராணுவ வீரர்களின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

லடாக்குக்கு 3 நாள் பயணமாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். அவர் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ததில் முன்னாள் ராணுவத்தினரின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். முன்னாள் ராணுவத்தினரின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி, ஒரே ஊய்வூதியம் திட்டம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு, நீண்ட கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தது. 

முன்னாள் ராணுவத்தினரின் நலன் மற்றும் திருப்தியில், அரசின் அசைக்கமுடியாத உறுதிக்கு இது சாட்சியமாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பில் நீங்கள் எடுத்துக்கொண்ட கவனத்தைப்போல், உங்கள் நலனில் கவனம் செலுத்துவதுதான் எங்கள் நோக்கம். முன்னாள் ராணுவத்தினரின் மறுவாழ்வுக்கு வேலைவாய்ப்பு கண்காட்சிகள் உட்பட பல நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. இதன் மூலம் முன்னாள் ராணுவத்தினர் பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல ஆன்லைன் சேவைகள் முன்னாள் ராணுவத்தினருக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கொவைட் தொற்று நேரத்தில் தொலைதூர மருத்துவ சேவை வழங்குவதற்காக ‘இ-செஹாத்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. முன்னாள் ராணுவத்தினர் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஐவிஆர்எஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.