ஆம் ஆத்மி நாடகமாடுகிறது: பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

பஞ்சாபில் செய்தியாளர்களர் சந்திப்பை நடத்துவதற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அனுமதி மறுத்ததாக வெளியான செய்தி உண்மையல்ல என்று முதல்வர் அமரீந்தர் சிங் விளக்கமளித்துள்ளார். 
அமரீந்தர் சிங்  (கோப்புப் படம்)
அமரீந்தர் சிங் (கோப்புப் படம்)

பஞ்சாபில் செய்தியாளர்களர் சந்திப்பை நடத்துவதற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அனுமதி மறுத்ததாக வெளியான செய்தி உண்மையல்ல என்று முதல்வர் அமரீந்தர் சிங் விளக்கமளித்துள்ளார். 

பஞ்சாபில் நாளை (ஜூன் 29) செய்தியாளர் சந்திப்பை நடத்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திட்டமிட்டுருந்த நிலையில், அதற்கு பஞ்சாப் முதல்வர் அலுவலகம் அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கேஜரிவாலுக்கு செய்தியாளர்களைச் சந்திக்க அனுமதி வழங்கவில்லை என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அரவிந்த் கேஜரிவால் கடந்த சில நாள்களுக்கு முன்பு பஞ்சாபில் பேரணி நடத்துவதற்கும் அனுமதி வழங்கினோம்.

அப்படி இருக்கையில், செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு ஏன் அனுமதி மறுக்கப்போகிறோம். அவர் விரும்பினால், அவருக்கு மதிய உணவை ஏற்பாடு செய்வதிமும் எனக்கு மகிழ்ச்சி. ஆம் ஆத்மி கட்சி நாடகமாடுகிறது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com