ஹரியாணாவில் முதல் 'டெல்டா பிளஸ்' கரோனா பாதிப்பு

ஹரியாணாவில் புதிதாக ஒருவருக்கு 'டெல்டா பிளஸ்' கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் முதல் 'டெல்டா பிளஸ்' கரோனா பாதிப்பு
ஹரியாணாவில் முதல் 'டெல்டா பிளஸ்' கரோனா பாதிப்பு

ஹரியாணாவில் புதிதாக ஒருவருக்கு 'டெல்டா பிளஸ்' கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பரவி வந்த கரோனா இரண்டாம் அலை பல்வேறு மாநிலங்களில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

கரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், ஒரு சில மாநிலங்களில் 'டெல்டா பிளஸ்' கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இதுவரை 174 மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 20 பேரிடம் அந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, தமிழகத்தில் 9 போ், மத்திய பிரதேசத்தில் 7 போ், கேரளத்தில் 3போ், பஞ்சாப், குஜராத்தில் தலா இருவா், ஆந்திரம், ஒடிஸா, ராஜஸ்தான், ஜம்மு, கா்நாடகத்தில் தலா ஒருவருக்கும் டெல்டா பிளஸ் வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ஹரியாணாவில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகவும், அப்பகுதியில் பரிசோதனை செய்து வருவதாகவும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com