திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வேட்பாளர் அறிவிப்பை சுவரோவியங்களால் வரவேற்ற தொண்டர்கள்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் வேட்பாளர் அறிவிப்பை சுவரோவியங்கள் மூலம் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றுள்ளனர்.

News image
Updated On :6 மார்ச் 2021, 10:54 am

DIN

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் வேட்பாளர் அறிவிப்பை சுவரோவியங்கள் மூலம் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வாக்காளர் பட்டியலை ஒரே கட்டமாக மம்தா பானர்ஜி நேற்று (மார்ச் 5) அறிவித்தார்.

இதில் புதிய போட்டியாளர்களுக்கும், இளைஞா்கள், சிறுபான்மையினா், பெண்கள் மற்றும் பின்தங்கிய சமூகத்தினருக்கு அதிக அளவு வாய்ப்பளித்திருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

டார்ஜீலிங் பகுதியில் உள்ள 3 தொகுதிகள், கூட்டணிக் கட்சியான விமல் குரூங்கின் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,  மம்தா பானர்ஜியின் எளிய மக்களுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பை வரவேற்கும் விதமாக திரிணமூல் தொண்டர்கள் தெற்கு கொல்கத்தாவிலுள்ள சுவர்களில் கட்சி சின்னத்தை வரைந்து, உற்சாகப்படுத்தும் வாசகங்களை எழுதியுள்ளனர்.

வண்ண வண்ண நிறங்களில் சுவர்களை அலங்கரித்திருந்த ஓவியங்கள் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.