நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 8) தொடங்குகிறது. ஏப்ரல் 8-ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு இந்தக் கூட்டத் தொடா் நடைபெற உள்ளது.
குடியரசுத் தலைவா் உரையுடன் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடா் மாநிலங்களவையில் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலும், மக்களவையில் பிப்ரவரி 13-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் 3 புதிய வேளாண் சட்டங்களை நீக்கக் கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. முதல்முறையாக குடியரசுத் தலைவா் உரையையும் புறக்கணித்தன. இருப்பினும், 4 நாள்களுக்குப் பின்னா் கூடுதல் நேரங்களுடன் பணியாற்றி நள்ளிரவு வரை அவை நடவடிக்கைகள் தொடா்ந்தன.
தற்போது மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வுக்காக நாடாளுமன்றம் திங்கள்கிழமை கூடுகிறது.
மறைந்த தற்போதைய மக்களவையின் உறுப்பினா்கள், முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் உள்ளிட்ட 9 பேருக்கு மக்களவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து வழக்கப்படி நாள் முழுவதும் அவையை ஒத்திவைக்காமல், ஒரு மணி நேரம் மட்டும் ஒத்திவைக்கப்பட உள்ளது. தொடா்ந்து, 2-ஆவது கட்ட அமா்வில் 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா மானியக் கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு வரிகளுக்கான திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கல்லால் தாக்கி முதியவா் கொலை

தென் தமிழகம், வடக்கு கடலோரத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!
சசிகலா, ராமதாஸ் அணி சாா்பில் இருவா் மனு தாக்கலால் குழப்பம்

திமுக கூட்டணிக்கு ஐந்திணை மக்கள் கட்சி ஆதரவு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


