தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், கர்நாடகம், குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான புதிய பாதிப்புகளில், 85.6 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில், 23,285 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 14,317 பேருக்கும், கேரளத்தில் 2,133 பேருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது, நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,97,237 ஆக உள்ளது.
இன்று காலை 7 மணி வரை 2.61 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 60 வயதுக்கு மேற்பட்ட 60,61,034 பயனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
55-வது நாளான நேற்று 4,80,740 தடுப்பூசிகள் போடப்பட்டன. நேற்று மகா சிவராத்திரையை முன்னிட்டு பலர் விரதம் இருந்ததால், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது.
கரோனா தொற்றிலிருந்து இதுவரை 1.09 கோடிக்கும் அதிகமானோர் குணடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15,157 நோயாளிகள் குணமடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 117 பேர், கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சம்பளமல்ல, நல்ல கதாபாத்திரங்களுக்காகவே காத்திருக்கிறேன்: மிருணாள் தாக்குர்

நாட்டின் பாதுகாப்பைச் சமரசம் செய்யும் காங்கிரஸ்: பிரதமர் மோடி!

கிழக்குச் சீமையிலே பட பாணியில் புதிய தொடர்!

தில்லியில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


