பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பஞ்சாபில் அதிகரிக்கும் கரோனா: மேலும் 2 இடங்களில் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு

கரோனா பரவல் அதிகரிப்பால், பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மற்றும் ஃபதேஹ்கர் சாஹிப் ஆகிய பகுதிகளில் மார்ச் 12 முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

News image

பஞ்சாபில் அதிகரிக்கும் கரோனா: மேலும் 2 இடங்களில் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு

Updated On :12 மார்ச் 2021, 9:32 am

DIN

கரோனா பரவல் அதிகரிப்பால், பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மற்றும் ஃபதேஹ்கர் சாஹிப் ஆகிய பகுதிகளில் மார்ச் 12 முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டு வந்த பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மற்றும் ஃபதேஹ்கர் சாஹிப் ஆகிய பகுதிகளில் மார்ச் 12 முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாட்டியாலா பகுதியில் இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.