கரோனாவின் இரண்டாம் அலையை நோக்கி இந்தியா... ஒரே நாளில் 39,726 பேருக்கு கரோனா: 154 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி தினசரி கரோனா பாதிப்பு 36,011-ஆகப் பதிவாகி இருந்தது.
கரோனாவின் இரண்டாம் அலையை நோக்கி இந்தியா... ஒரே நாளில் 39,726 பேருக்கு கரோனா: 154 பேர் பலி

புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி தினசரி கரோனா பாதிப்பு 36,011-ஆகப் பதிவாகி இருந்தது.

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 9 ஆயிரத்திற்கும் கீழ் இருந்த நிலையில், தற்போது 40 ஆயிரத்தை நெருங்கியிருப்பது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 39,726 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 1,15,14,331-ஆக அதிகரித்துள்ளது.

தொடா்ந்து தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,71,282-ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி தினசரி பாதிப்பு 26,624-ஆக இருந்தது. இது கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சபட்ச தினசரி பாதிப்பாகும். 

கரோனாவில் இருந்து 20,654 போ் குணமடைந்தனா். இவா்களுடன் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 1,10,83,679  -ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு மேலும் 154 போ் உயிரிழந்தனா். கரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,59,370 -ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 96.26 ஆக அதிகரித்துள்ளது, சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.36 ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.38 ஆகவும் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் 18-ஆம் தேதி வரையிலும் 23 கோடியே 13 லட்சத்து 70 ஆயிரத்து 546 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், வியாழக்கிழமை மட்டும் 10,57,383 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை வரையிலும் 3 கோடியே 93 லட்சத்து 39 ஆயிரத்து 817 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை அதிரடியாக அதிகரித்து வருகிறது. இந்தியா கரோனாவின் இரண்டாம் அலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கவலை தெரிவித்த எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, நாள்தோறும் 50 லட்சம் பேருக்‍கு தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே இரண்டாம் அலையை தவிர்க்‍க முடியும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா முதல் அலையை தொடங்கிய நிலையில், இரண்டாம் அலை இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பம் ஆவதாக கூறியுள்ளார். 

மேலும் இந்தியாவில் கரோனா ஒழிந்து விட்டதாக நினைத்து மக்‍கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகளை கடைபிடிக்‍காததே இதற்கு காரணம் என்று ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com