பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

திருமண தோஷம்: கட்டாயத்தால் மாணவனை மணந்த ஆசிரியை

பஞ்சாபில் திருமண தோஷ நிவர்த்தியாக குடும்பத்தாரின் கட்டாயத்தின்பேரில் தனது 13 வயது மாணவனையே ஆசிரியை மணந்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :19 மார்ச் 2021, 8:40 am

DIN

பஞ்சாபில் திருமண தோஷ நிவர்த்தியாக குடும்பத்தாரின் கட்டாயத்தின்பேரில் தனது 13 வயது மாணவனையே ஆசிரியை மணந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளை எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது பிறப்பு ஜாதகத்தின்படி அவருக்கு திருமண தோஷம் இருப்பதால், சிறுவனை திருமணம் செய்து பின்னர் விதவைக் கோலம் தரிக்க வேண்டும் என்று அவர்களது குடும்ப ஜோசியர் அறிவித்துள்ளார்.

பெற்றோரின் நெருக்கடியால் ஆசிரியையும், தனது டியூசனில் படிக்கும் 13 வயது சிறுவனை திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் பெற்றோர்கள் தரப்பில் புகாரளிக்கப்பட்டது.

பின்னர் ஆசிரியையின் இல்லத்திலிருந்து வந்த நபர்கள் மாணவனின் பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் திரும்பப்பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.